2023 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு

Webdunia
புதன், 25 ஜனவரி 2023 (22:44 IST)
2023 ஆம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு பத்ம விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது.

இந்த விருதுகள் ஒவ்வொரு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும்,.  எனவே இந்த ஆண்டிற்காக பத்ம விருதுகளுக்கு கடந்த மே மாதம்  முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், பத்மர் விருதுகள் பெறுபவர்களுக்கான பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதில்,  மேற்கு வங்கம் மாநிலத்தில் வசிக்கும் மருததுவர் திலீப் மஹாலனாபிஸ், தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன், ஆர் ஆர் ஆர் பட இசையமைப்பாளர் கீரவாணி, கல்யாண சுந்தரம் பிள்ளை, புதுச்சேரி மருத்துவர்  நளினிபார்த்த சாரதி  உள்ளிட்ட 26 பேர் இவ்விருது பெறவுள்ளனர்.

நாளை குடியரசு தினவிழா அன்று, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பத்ம விருதுகள் வழங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்