தாமதமாக சென்ற ஆக்சிஜன் டேங்கர் லாரி: திருப்பதியில் 11 நோயாளிகள் பலி:

Webdunia
செவ்வாய், 11 மே 2021 (07:51 IST)
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சரியான நேரத்தில் செல்லாமல் தாமதமாக சென்ற ஆக்சிஜன் டேங்கர் லாரியால் 11 உயிர்கள் பரிதாபமாக பலியான சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில வாரங்களாக கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இருக்கும் நிலையில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன 
 
இந்த நிலையில் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் ஆக்ஸிஜனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வருவதற்கு 45 நிமிடங்கள் தாமதமானது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது 
 
45 நிமிட தாமதம் காரணமாக 11 உயிர்கள் பலியானது குறித்து விசாரணை செய்ய திருப்பதி அரசு மருத்துவமனையில் அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்