450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்!

ஞாயிறு, 9 மே 2021 (08:02 IST)
450 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் வழங்கிய சிஎஸ்கே நிர்வாகம்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று பிரதமர் மோடிக்கு இது குறித்து கடிதம் எழுதினார். முதல்வரின் கடிதத்தை பரிசீலனை செய்த பிரதமர் மோடி உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மத்திய அரசு மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும் தொண்டு நிறுவனங்களும் தமிழக அரசுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் கொடுத்து உதவி செய்து வருகின்றன என்பது குறித்து ஏற்கனவே பார்த்தோம் 
 
அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில் 450 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கியுள்ளது. இந்த செறிவூட்டிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகிகள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் அரசுக்கு வழங்கி உள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ஆகி வருகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்