கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமென்றாலும் இவ்வருடம் சற்று அதிகமாகவே வெயில் கொளுத்திவருகிறது.
வேகாத வெயிலில் நடந்தும்வ் வேர்க்க விறுவிறுக்க பேருந்தில் பயணம் போகிறவர்களுக்குத்தான் அதிக புளுக்கம் என்றால்...காரில் போகிறவர்களுக்கும் வெயில் தாக்கம் அதிகமாகவே இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
அதுபோல் தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஆம்! மேற்சொன்ன பகுதியில் வசித்து வரும் ஒரு நபர் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்பதற்காக தனது காரை சாணத்தால் மெழுகி இருக்கிறார்.
பொதுவாக தரையில் மெழுகும் சாணத்தை தனது சொகுசு காரில் மெழுகி இருக்கிறார். இதைப் படம்பிடித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பகிரவே தற்போது இது வைரலாகிவருகிறது.
மேலும் ரூபேஷ் 45 டிகிரி வெப்பநிலையில் தனது கார் வெப்பமடையாமல் இருப்பதற்காக தந்து காரை சாணத்தால் மெழுகியுள்ளார்.
சீஜல் ஷா என்ற பெண்மணியும் தனது காரை சாணத்தால் மெழுகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.