ஆனால், வலி அதிகரித்த வண்ணமே இருந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் சாதாரண வலி என மருந்து மாத்திரைகளை கொடுத்துள்ளார். ஆனால், அப்போதும் லி-க்கு காது வலி தீராததால் மருத்துவர் மைக்ரோஸ்கோப் மூலம் காதுக்குள் சோதனை செய்துள்ளார்.
அப்போதுதான் அவரது காதுக்குள் சிலந்தி ஒன்று வலை பிண்ணி இருந்தது தெரியவந்தது. பின்னர் காதில் உப்பு கலந்து தண்ணீரை ஊற்றி சிலந்தியை உயிருடன் வெளியே எடுத்துள்ளனர். அதன் பின்னர் சில சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் லீ-யின் காதில் சிலந்தி இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...