உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கெளதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம், டைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் நாய்களின் வாய் பகுதியை Muzzle கொண்டு மூட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
இங்கு பல பகுதிகளில் நாய்கள் மக்களை கடிப்பது அதிகரித்த நிலையில் மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய உத்தரவிட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் நாய்கள், மக்களை கடிப்பது அதிகரித்த நிலையில், இதனால், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அங்குள்ள கெளதம புத்தா நகர் மாவட்ட நிர்வாகம், நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் நாய்களின் வாய் பகுதியை Muzzle கொண்டு மூட வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது.