நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள வேண்டும்- முதல்வர் சித்தராமையா அழைப்பு

Sinoj

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (17:31 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு  புதிய நாடாளுமன்றாத்தில் சமீபத்தில்  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது.
 

இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். இந்த  நிலையில், தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிதிப் பங்கீட்டில் மத்திய  அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டெல்லியில் நடைபெறும்   போராட்டத்தில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

‘’கர்நாடகத்திற்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு தொடந்து நடந்துகொள்கிறது. இதைக் கண்டித்து, நாளை டெல்லியில் கர் நாடகம் அரசு சார்பில் நடைபெறும் ‘Chalo Delhi ‘போராட்டத்தில் கர்நாடகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் என்ற முறையில் நிர்மலா சீதாராமனும் கலந்துகொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே இந்த இடைக்கால பட்ஜெட் பற்றி காங்கிரஸ் எம்.பி., எ.டி.கே.சுரேஷ்குமார் தனிநாடு கோர வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்