காஷ்மீர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டில்..! 5 விமான நிலையங்கள் மூடல்! - அடுத்தடுத்த அதிரடி!

Prasanth Karthick

புதன், 7 மே 2025 (09:32 IST)

ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியாவின் எல்லைப்பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

 

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமாக பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் பதுங்கு தளங்களை தாக்கி அழித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

 

இதனால் இந்தியாவிலிருந்து பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் விமான நிலையத்தை இந்திய ராணுவம் முழுமையான கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டுள்ளது. அங்கு ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதுதவிர எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு, லே, தரம்சாலா உள்பட 5 விமான நிலையங்கள் முழுவதும் மூடப்பட்டுள்ளன. பதற்ற சூழலை கருத்தில் கொண்டு ஜோத்பூர், அமிர்தசரஸ், ஜாம் நகர், சண்டிகள் உள்ளிட்ட வட இந்தியாவில் உள்ள 9 விமான நிலையங்களில் விமான சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்