இந்தியாவின் போரை இந்த உலகத்தால் தாங்க முடியாது! - உலக தலைவர்கள் ரியாக்‌ஷன்!

Prasanth Karthick

புதன், 7 மே 2025 (08:47 IST)

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது குறித்து உலக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், நேற்று இரவு இந்திய ராணுவம் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கு தளங்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது.

 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “இந்தியா - பாகிஸ்தான் இடையேயான இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புவதாக கூறியுள்ளார்.

 

இந்த போர் நிலவரம் குறித்து பேசியுள்ள அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா பின் சயீத், “இருநாடுகளும் பதற்றத்தை குறைத்து பிராந்திய மற்றும் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த பெரிய நடவடிக்கையையும் தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

இந்தியா - பாகிஸ்தான் போர் குறித்து பேசியுள்ள ஐ.நா பொதுச்செயலாளர் “இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ராணுவ மோதலை இந்த உலகத்தால் நிச்சயம் தாங்கமுடியாது” என பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்