பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பஹவல்பூர் உள்ளிட்ட பயங்கரவாதிகளின் முகாம்கள் குறி வைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ளும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளங்கள் குறி வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பிற்கு 2001ம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல், 2019ல் நடந்த புல்வாமா தாக்குதல் போன்றவற்றில் தொடர்பு உள்ளது,
மேலும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயிற்சி ம்காமாக செயல்பட்ட முரித்கியையும் ராணுவம் குறிவைத்து தாக்கியுள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான 9 முகாம்களும் பயங்கரவாதைகள் தற்கொலைப்படை தளங்கள், முக்கிய பயிற்சி தளங்க என இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய பகுதிகள் ஆகும்.
சிந்தூர் என்றால் குங்குமம் என பொருள். பஹல்காமில் கணவரை இழந்த மனைவிகளுக்காக பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு அதனால் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆபரேஷன் சிந்தூரில் பிரான்சிடம் இருந்து வாங்கிய ஹேமர் குண்டுகளை கொண்டு இந்தியா தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களோ, பாகிஸ்தான் மக்கள் வாழும் பகுதிகளோ தாக்கப்படவில்லை. பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே தாக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K