ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பகுதிகளில் தாக்குதல் நடத்தியது.
9 முகாம்களில் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத முகாம்கள் அனைத்தும் அழிக்கப்பட்டதாகவும், தீவிரவாதிகள் பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் பின்னணியில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், "இந்திய ராணுவத்தால் பெருமை கொள்கிறோம். ஜெய் ஹிந்த்!" என்று பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி மட்டுமின்றி, மற்ற காங்கிரஸ் தலைவர்களான கார்கே, ஜெயராம் ரமேஷ் உள்ளிட்டவர்களும் இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.