ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

Siva

புதன், 7 மே 2025 (08:17 IST)
பஹல்காம்  தாக்குதலுக்கு பதிலடியாக, இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்துள்ளது. இதில் பல தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில், "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் நடந்த இந்த தாக்குதலுக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
 
இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில், இந்த தாக்குதல் குறித்த விரிவான விளக்கத்தை இந்திய ராணுவம் அளிக்க அனுமதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், பாகிஸ்தான் ராணுவ தளவாடங்களை குறிவைத்து எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை என்றும் மத்திய பாதுகாப்பு துறை விளக்கம் அளித்துள்ளது.
 
இதனை  பாகிஸ்தானும் ஒப்புக் கொண்டதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்