வங்கி வாடிக்கையாளர்களுக்கு இனி ரூபே கார்டுகள் மட்டும்தான்: நிர்மலா சீதாராமன்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (14:52 IST)
வாடிக்கையாளர்களுக்கு இனி வங்கிகள் ரூபே கார்டுகளை மட்டுமே வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அவர்கள் ’வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அனைத்து வங்கி கணக்குகளும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை வங்கிகள் உறுதிசெய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்
 
மேலும்  வங்கிகள் டிஜிட்டல் பரிமாற்றத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும் என்றும் டிஜிட்டல் பரிமாற்றத்தால் இருக்கும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை வங்கிகள் பொது மக்களிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் ரூபே கார்டுகளை மட்டுமே வங்கிகள் வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது விசா உள்பட பல டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் உரூபே கார்டுகளை மட்டுமே வழங்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்