மீம் கிரியேட்டருக்கு மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. பெங்களூரு நிறுவனம் அறிவிப்பு..!

Webdunia
புதன், 22 மார்ச் 2023 (16:32 IST)
மீம் கிரியேட்டருக்கு மாதம் ரூபாய் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என பெங்களூர் நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பொழுதுபோக்காக மீம் கிரியேட் செய்யும் நபர்கள் பலர் உருவாகியுள்ளனர் என்பதும் அவர்கள் கிரியேட் செய்யும் மீம்கள் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த பங்கு சந்தை புரிதல் குறித்த நிறுவனம் மீம் கிரியேட்டருக்கு மாதம் ரூபாய் ஒரு லட்சம் சம்பளம் கொடுத்து உள்ளதாக அறிவித்துள்ளது. 
 
ஸ்டாக்குரோ என்ற அந்த நிறுவனம் பங்குச்சந்தை மற்றும் நிதி மேலாண்மை குறித்து நகைச்சுவையுடன் மீம் தயார் செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு திறமையுள்ள நபருக்கு ஒரு லட்சம் சம்பளம் தர தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. 
 
மீம் கிரியேட்டர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஸ்டாக்குரோ என்ற நிறுவனத்தின் லிங்க்ட்இன் பக்கத்தில் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுதுபோக்காக மீம் கிரியேட் செய்யும் நபர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளமா என்ற ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்