டிசம்பர் 31 வரை 144 தடை: எங்கு எதற்கு தெரியுமா?

புதன், 15 டிசம்பர் 2021 (18:24 IST)
ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில்144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிலும் படிப்படியாக பரவி வருகிறது என்பதும் நேற்று முன்தினம் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 ஆக இருந்த நிலையில் தற்போது 61ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் ஏற்கனவே மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமிக்ரான் பரவியுள்ள நிலையில் மஹாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில்144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு...
 
1. பொது இடங்களில் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. 
2. வணிக வளாகங்களில் பணிபுரியம் கட்டாயம் இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். 
3. கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். 
4. தடுப்பூசி போடாத வாடிக்கையாளர்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.
5. பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள், கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி இருக்க வேண்டும். 
6. நிகழ்ச்சிகளில் 50 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்