சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, நேற்று பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு சிறையில் சிறப்பு வசதி தர சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. சிறையில் சசிகலாவுக்கு காலை 7 மணி, பகல் 11 மணி மற்றும் மாலை 5 மணி என மூன்று வேளையிலும் சிறை உணவு வழங்கப்படும்.
காலை 7 மணிக்கு 2 சப்பாத்தி, சாம்பார் அதனுடன் சேர்த்து காபி வழங்கப்படுகிறது. பகல் 11 மணிக்கு 400 கிராம் சாதம், 400 கிராம் கேழ்வரகு களி உருண்டையுடன் சேர்த்து சாம்பார் வழங்கப்படும் என்றும். மாலை 5 மணிக்கு கலவை சாதம் வழங்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. சசிகலா எந்த அரசு பதவியிலும் இல்லாததால் அவருக்கு சிறப்பு வசதிகள் இல்லை என்று கூறப்படுகிறது.