100 ஆண்டுகள் பழமையான பாலத்தை 8 மணி நேரத்தில் மாற்றியமைத்த ரயில்வே

Webdunia
சனி, 6 ஜனவரி 2018 (18:44 IST)
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் அருகே 100 ஆண்டுகள் பழமையான பாலத்தை வடக்கு ரயில்வே அதிகாரிகள் 8 மணி நேரத்தில் மாற்றி புதிய பாலத்தை நிறுவினர்.

 
நாட்டின் பழமையான ரயில் பாதைகளில் ஒன்றான சஹரான்பூர் - லக்னோ வழித்தடத்தில் 100 ஆண்டுகள் பழமையான பல பாலங்கள் பயன்பாட்டில் உள்ளது. இதனால் கடந்த 5 ஆண்டுகளாக அந்த பாதையில் செல்லும் ரயில்களுக்கு வேகக்கட்டுபாடு நடைமுறையில் இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் பயண நேரம் காலதாமதம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாலங்கலை புதுபிக்க வடக்கு ரயில்வே முடுவு செய்தது. தற்போது வடக்கு ரயில்வே அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. 
 
இதுதொடர்பாக வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் விஷ்வேஸ் சௌபே கூறியதாவது:-
 
இரும்பு பாலத்தை மாற்றிவிட்டு புதிய ஆர்.சி.சி வகையிலான கான்கிரீட் பெட்டிகள் அமைப்புகளை பொருந்தினோம். 7.30 மணி நேரத்தில் பழைய பாலத்தை மாற்றி புதிய பாலத்தை பொருத்திவிட்டோம். 4 பாலங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த மாதத்துக்குள் மீதமுள்ள 2 பாலங்கள் மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்