வட மாநிலங்களை வெளுத்து வாங்கும் மழை; மின்னல் தாக்கி 68 பேர் பலி!

Webdunia
திங்கள், 12 ஜூலை 2021 (14:35 IST)
இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடி, மின்னல் தாக்கி பலர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மின்னல் தாக்கி இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்