இதனால் நீலகிரி, கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிக கனமழையும், தேனி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அந்தமான், தமிழகம் மற்றும் ஆந்திரா கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.