நொய்டா இரட்டை கோபுரத்தை தகர்க்க இத்தனை கோடி ரூபாய் செலவா?

Webdunia
ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2022 (16:04 IST)
நொய்டாவில் உள்ள இரட்டை கோபுரத்தை விதிமுறைகளை மீறி காட்டியது அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இன்று மதியம் அந்த இரட்டை கோபுர கட்டிடங்கள் இடிக்கப்பட்டன.
 
சரியாக இரண்டு முப்பது மணிக்கு வெடிகள் வைத்து மும்பையை சேர்ந்த நிறுவனம் இந்த இரட்டை கோபுர இடிப்பு பணியை மேற்கொண்டது. சரியாக ஒன்பது நொடிகளில் இந்த இரட்டை கோபுரம் தரைமட்டமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நொய்டா இரட்டை கோபுரத்தை இடிக்க 20 ஆயிரம் இடங்களில் வெடிமருந்து வைக்கப்பட்டது என்றும் அதற்காக 20 கோடி ரூபாய் செலவிட பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் இணையதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்