செலவு ரூ.22,000 கோடி, வரவு ரூ.200 கோடி: சென்னை மெட்ரோ அதிகாரிகள் தகவல்!
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (18:11 IST)
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 22 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாகவும், ஆனால் இதுவரை 200 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில் பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் விதமாக இருந்தாலும் இன்னும் பலர் மெட்ரோ ரயிலை பயன்படுத்தாமல் உள்ளனர். அதனால் மெட்ரோ ரயில் பல நேரங்களில் குறைவான பயணிகளுடன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் இது குறித்து கூறிய போது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த 22 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் ஆனால் இதுவரை 200 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்
மேலும் மெட்ரோ ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை குழுவை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்