ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நின்றிருந்த பெண்களை கண்மூடித்தனமாக லத்தியால் அடித்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது
கடந்த 16ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு இலவச அரிசி கொடுப்பதாக உபி மாநிலத்தில் உள்ள நொய்டா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பெண்கள் நீண்ட வரிசைகளில் இலவச அரிசியை வாங்குவதற்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ஒரு சிறிய தள்ளுமுள்ளு காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், இரண்டு பெண்களை லத்தியால் அடித்து உள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பெண்களை அடித்த சப்-இன்ஸ்பெக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது
இந்த வீடியோ வைரலானதை அடுத்து உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக பெண்களை லத்தியால் அடித்த சப் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண்களின் பெயர் தனுஜா மற்றும் தேவி என்றும், அந்த இரண்டு பெண்கள் புகார் அளிக்காமலேயே சமூக வலைத்தள வீடியோ ஆதாரத்தின் பேரிலேயே காவல்துறை உயரதிகாரிகள் இந்த சஸ்பெண்ட் என்ற அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்தக்கது