திமுக - பாஜகதான் எதிரி? அவர்களோடு என்றும் கூட்டணி கிடையாது! - கறாராக போட்டு உடைத்த விஜய்!

Prasanth K

வெள்ளி, 4 ஜூலை 2025 (14:16 IST)

பாஜகவோடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்த நிலையில், பாஜகவோடு கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என்று அறிவித்துள்ளார் விஜய்.

 

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைக்க உள்ளதாக பேசிக்கொள்ளப்பட்ட நிலையில் பாஜகவினரும் பொறுத்திருந்து பாருங்கள் என்ற வகையிலேயே பதில் சொல்லி வந்தனர். இந்நிலையில் கூட்டணி குறித்து இன்று நடந்த தவெக செயற்குழு கூட்டத்தில் பாஜகவின் இந்தி, சமஸ்கிருந்த திணிப்பு, கீழடி விவகாரம் உள்ளிட்டவற்றில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 

அதை தொடர்ந்து கூட்டணி குறித்து பேசிய விஜய், தமிழர்களின் நலனுக்கு மட்டுமல்லாமல், இந்திய மக்களின் நலனுக்கே அச்சுறுத்தலாக விளங்கும், கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்குமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி கிடையாது என கறாராக கூறியுள்ளார்.

 

மேலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையிலேயே சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அமையும் என்றும், அது கண்டிப்பாக திமுக, பாஜகவிற்கு எதிரான கூட்டணியாக அமையும் என்பதில் மாற்றமில்லை என்றும், இதுவே உறுதியான இறுதி முடிவு என்றும் அறிவித்துள்ளார் விஜய்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்