காவிரி குறுக்கே அணைகட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை - கர்நாடக அரசு பிடிவாதம் !

Webdunia
ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (11:24 IST)
கர்நாடகா மாநிலம் தலைக்காவிரில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நதி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில்  வருடத்திற்கு 177. 25 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட வேண்டுமென உச்ச நீதிமன்றம்  கர்நாட அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவுப்படி  மாதம் தோறும் திறந்துவிடப்படும் குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீர் அளவு உள்ளதா என்றால்,  மழை இருந்தால் தான் தண்ணீர் என கர்நாடக அரசு கூறிவருகிறது.
தமிழகத்தில் காவிரி நீரை நம்பியுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் எல்லாம் விவசாயத்திற்கு நீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், கர்நாடக அரசு, காவேரி குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ளது. இதற்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பலத்த எதிர்ப்பு தெரிவித்து மேகதாதுவில் அணைகட்டுவதை தடுக்க  பலத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.ஆனால் கர்நாடக அரசு கேட்பதாக இல்லை.
 
இந்நிலையில் கர்நாடக அரசு மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு கர்நாடக அரசு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில், காவேரியின் குறுக்கே அணைகட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது. 
 
மேலும்,2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இந்த அணை கட்டுவதே தமிழகத்திற்கு நீரை திறந்துவிடத்தான். அதன்படி மேகதாதுவில் அணைகட்ட தேர்வு செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்