பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்: திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (11:36 IST)
மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்திருக்கும் நிலையில் இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் 26 கட்சிகள் ஆதரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்களவையில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வருகிறது
 
அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தரும் கோகையின் மகன் தருண் கோகெய் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர உள்ளார். 
 
மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதை அடுத்து இந்த தீர்மானம் கொண்டு வருவதாக  எதிர்க்கட்சி கூட்டணி அறிவித்துள்ளது. 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு திமுக உள்பட 26 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இருப்பினும் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்