மீண்டும் உச்சம் சென்ற பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (10:41 IST)
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக சரிந்து வந்த நிலையில் இன்று மீண்டும் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று காலை 9 மணிக்கு பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்ந்து 66857 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிபர்த்தி 131 புள்ளிகள் உயர்ந்து 19,812 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
கடந்த இரண்டு நாட்களாக பங்கு சந்தை சரிந்த நிலையில் இன்று மீண்டும் உச்சத்திற்கு சென்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 மேலும் இந்த வாரம் முழுவதுமே பங்குச்சந்தை பாசிட்டிவாக தான் இருக்கும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்