15 ஆண்டுகளுக்கு பிறகு நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான விவாதம்: நாளை என்னவாகும்?

Webdunia
வியாழன், 19 ஜூலை 2018 (20:13 IST)
மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட எதிர்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டார். இதன் மீதான விவாதம் நாளை (ஜூலை 20) நடைபெறவுள்ளது. 
 
ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியினர் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு முயற்சித்ததும், அதை சபாநாயகர் ஏற்றுக்கொள்ள மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.
 
இதனையடுத்து பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாள் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. 
 
மத்தியில் தனிப்பெரும் கட்சியாக 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு நாளை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எதிர்கொள்கிறது.
 
2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அப்போது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. அதன்பின்னர், 15 ஆண்டுகளுக்கு பின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.
 
மக்களவையில் பாஜக எம்பிக்கள் 273 பேரும், தேசிய ஜனநாயக்க கூட்டணியோடு சேர்க்கையில் 314 உறுப்பினர்களும் உள்ளனர். ஆனால், எதிர்க்கட்சிகளுக்கு ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் 222 எம்பிக்கள் மட்டுமே இருப்பதால், இந்தத் தீர்மானம் தோல்வி அடையும் என கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்