மகளிர் உரிமைத்தொகை வழங்க மதுபானங்கள் விலை ஏற்றமா? அமைச்சர் முத்துச்சாமி விளக்கம்..!

Webdunia
புதன், 26 ஜூலை 2023 (11:48 IST)
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபான விலை ஏற்றத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 
 
அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக மதுபானம் விலை உள்பட அனைத்து விலைகளும் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
இந்த பக்கம் கொடுப்பது போல் கொடுத்து இன்னொரு பக்கம் மக்களிடமிருந்து அரசு பணத்தை வாங்கிக் கொள்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டியிருந்தார் 
 
இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலையேற்றத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்று அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார் 
 
மேலும் அனைத்து மதுபானங்களுக்கும் விலை உயர்த்தப்படவில்லை என்றும் ஒரு சில குறிப்பிட்ட மதுபானங்களுக்கு மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்