சிறார் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை கிடையாது: மேனகா காந்தி

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (06:20 IST)
16-18 வயது சிறார் குற்றவாளிகளை சிறைக்கு அனுப்பக்கூடாது என்ற 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிசட்ட வரைவு விதிகளை அமைச்சர் மேனகா காந்தி வெளியிட்டார். 


 

 
பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி 2015ஆம் ஆண்டு சிறார் குற்றவாளி நீதிசட்ட வரைவு விதிகளை வெளியிட்டார். 
 
இதைத்தொடர்ந்து அதில்,16 முதல் 18 வயது வரையிலான சிறார் குற்றவாளிகளுக்கு காவலில் வைக்கவோ, அவர்களுக்கு சிறை தண்டனை அளிக்கக் கூடாது, அதற்கு பதிலாக மாநில அரசுகள் பாதுகாப்பு மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சிறார் குற்றவாளிகள் தங்களுக்கு எதிரான தீர்ப்பில் அதிருப்தியடைந்தால் அவர்கள் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். சிறார்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு, சமூகத்தில் அவர்கள் பங்களிக்க இயன்றால் அவர்களின் எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்து சிறார்கள் நீதிமன்றம் முடிவெடுக்கும். இவ்வாறு அந்த சட்டவரைவு விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்