பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவதே மேல் நிதிஷ் கூறிய வீடியோ டிரெண்ட்..

Siva
ஞாயிறு, 28 ஜனவரி 2024 (16:59 IST)
பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவது மேல் என ஒரு வருடத்திற்கு முன்னர் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
பீகார் முதல்வராக இருக்கும் நிதீஷ் குமார் கடந்த 10 ஆண்டுகளில் ஐந்து முறை கூட்டணி மாறிவிட்டார். பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி அவர் கூட்டணி வைத்துள்ளதை பார்த்து பீகார் மக்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
இதனை அடுத்து அடுத்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்த போது பாஜக கூட்டணியில் இருப்பதை விட உயிரை விடுவதே மேல் என்று நிதிஷ்குமார்  கூறினார்.  
 
இப்போது அவர் மீண்டும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில் நிதீஷ் குமார் எப்போது உயிரை விடுவார் என நெட்டிசன்கள் கேலியும் கிண்டலம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்