பிரஷாந்த் கிஷோர் ஒரு பொய்யர்: நிதிஷ்குமார் கடும் தாக்கு!

Webdunia
சனி, 8 அக்டோபர் 2022 (14:31 IST)
தேர்தல் வியூகம் மன்னனான பிரசாந்த் கிஷோர் ஒரு பொய்யர் என்றும் அவர் சொல்வது எல்லாமே பொய் என்றும் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரசாந்த் கிஷோர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியை வழி நடத்துமாறு தன்னிடம் நிதிஷ்குமார் கேட்டதாகவும் ஆனால் தான் மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்
 
இந்த கருத்து பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்கு பதிலளித்துள்ள நிதிஷ்குமார் எங்கள் கட்சியை வழிநடத்த உதவி செய்யுமாறு பிரசாந்த்திடம் கேட்கவில்லை என்றும், அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் என்னை காங்கிரஸ் கட்சியில் இணைய சொன்னார் என்றும் ஆனால் அவர் தற்போது பாஜகவுடன் கை கோர்த்து செயல்படுகிறார் என்றும் அவர் ஒரு பொய்யர் என்றும் அவர் சொல்வதைப் பற்றி எங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்