திமுக எம்.பி. அப்துல்லா சொன்ன தமிழ் பழமொழி- திருத்திக் கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2023 (10:30 IST)
திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, நாடாளுமன்றத்தில் பேசும்போது ஒரு பழமொழியைக் கூற அதை திருத்திக் கூறினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தன்னுடையப் பேச்சை தொடங்குவதற்கு முன்னர் அப்துல்லா “என்னுடைய உரையை தொடங்குவதற்கு முன்னர் ஒரு தமிழ் பழமொழியை சொல்லி ஆரம்பிக்கிறேன் எனக் கூறி ‘ஆசை இருக்குது தாசில் பண்ண, ஆனா அதிர்ஷ்டம் இருக்குது கழுத மேய்க்க” எனக் கூறி ஆரம்பித்தார்.

அப்போது அவையில் இருந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “கழுத மேய்க்க இல்ல.. ஆடு மேய்க்க” எனக் கூறினார். மேலும் “ஆசைக்கு ஆடு என்பதுதான் ரைமிங்கா இருக்கும்” எனவும் கூறினார்.

இதையடுத்து பேசிய அப்துல்லா “தெரியல உங்க ஊருல ஆடுன்னு இருந்திருக்கலாம். புதுக்கோட்டைல எல்லாம் கழுத மேய்க்க எனதான் சொல்வோம்” எனக் கூற அவையில் கலகலப்பான சூழல் உருவானது. அதன் பின்னர் அப்துல்லா தன்னுடைய உரையை தொடங்கி பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்