அசாம் மாநிலத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

Webdunia
சனி, 25 டிசம்பர் 2021 (18:56 IST)
அசாம் மாநிலத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளது.

 
அதன்படி, இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும், ஆனால், இந்த கட்டுப்பாடு டிசம்பர் 31-ம் தேதிக்குப் பொருந்தாது என, அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
 
உணவகங்கள், காய்கறி - பழக்கடைகள், பால் விற்பனைக் கடைகள் உள்ளிட்டவை இரவு 10.30 மணி வரை மட்டுமே செயல்படும் என, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது.
 
முன்னதாக ஒமிக்ரான் பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதை தொடர்ந்து உத்தரபிரதேசத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பொதுமக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்