மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் 53 வயது காவலாளி ஒருவர், இரண்டு ஆண் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் பள்ளி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் 15 மற்றும் 17 வயதுடையவர்கள் என்றும், அவர்களை பள்ளியின் கேண்டினில் காவலாளி மாறி மாறி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. மாணவர்கள் இது குறித்துப் பள்ளி மேலாளரிடம் புகார் அளித்த நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.