நாங்கள் கை காட்டும் பெண்களை மூன்று மாதத்தில் கர்ப்பம் ஆக்கினால் ரூபாய் 20 லட்சம் பரிசு என்று புதுவிதமான மோசடி ஒன்று வட மாநிலங்களில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவும் சில வீடியோக்களில் இளம் பெண்களின் புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி, இந்த பெண்களுக்கு குழந்தை இல்லை என்றும், இந்த பெண்களை மூன்று மாதங்களுக்குள் கர்ப்பமாக்கும் ஆண்களுக்கு 20 லட்சம் வரை ரொக்க பரிசு வழங்கப்படும் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பார்த்த இளைஞர்கள் பண ஆசை காரணமாக குறிப்பிட்ட எண்களை தொடர்பு கொள்ளும்போது, அதில் பேசுபவர்கள் ஆசை ஆசையாக பேசுகிறார்களாம். "எங்கள் கார் டிரைவர் உங்களை ஒரு ஹோட்டலுக்கு அழைத்து செல்வார், அங்கு நீங்கள் ஒரு பெண்ணை சந்திப்பீர்கள். அந்த பெண்ணுடன் நீங்கள் உடலுறவு கொண்டு கர்ப்பம் தரிக்க வைக்க வேண்டும். கர்ப்பம் தரித்தால் 20 லட்சம். ஒரு வேலைக்கு கர்ப்பம் தரிக்காவிட்டாலும், உங்களுக்கு ஐந்து லட்சம் வழங்கப்படும்" என்று கூறுகின்றனர்.
உடனே அதை நம்பிய வாலிபர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க, அடையாள அட்டைக்கு முதலில் ரூபாய் 999 என்று வாங்கிக் கொள்வார்கள். அதன் பின்னர் ஹோட்டல் செலவுகள் உள்பட சில காரணங்களை கூறி, ஒரு லட்சம் வரை பணத்தை படிப்படியாக கறந்து விடுவார்கள்.
அதனை அடுத்து திடீரென போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு, மற்ற இளைஞர்களை ஏமாற்றச் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த மோசடியில் மத்திய பிரதேசம், ஹரியானா, பீகார் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான பணத்தை இழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.