மெட்ரோ இயங்குமா? வகுப்பட்டுள்ள புது வழிமுறைகள் என்ன?

Webdunia
வியாழன், 28 மே 2020 (12:31 IST)
ஊரடங்கு இன்மும் சில நாட்களில் முடியவுள்ள நிலையில் மெட்ரோ இயக்கப்பட்டால் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என பட்டியல் ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. 
 
ரயில் நிலைய படிக்கட்டுகளை தொடக் கூடாது, லிப்ட் உள்ளே இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்
 
ரயில் நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் அவசியம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்
 
தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்படும், பின்னர் அனைவருக்கும் கிருமி நாசினி அளிக்கப்படும்
 
டிக்கெட் வழங்குவதில் இனி டோக்கனுக்கு பதிலாக முழுமையாக ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தப்பட உள்ளது
 
இனி 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும், அவசரமான நேரங்களில் 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்
 
காலை 8 - 10 மற்றும் மாலை 6 - 10 நேரங்களில் 5 நிமிட இடைவெளியில் 35 ரயில்கள் இயக்கப்படும் 

6 நபர் அமரக்கூடிய இருக்கையில் இனி 2 நபர்கள் மட்டுமே அமர வேண்டும்
 
ஒரு ரயிலில் இனி 160 பயணிகளை மட்டுமே அனுமதிக்கப்படுவர்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்