1 லட்சத்து 58 ஆயிரம் பாதிப்புகள் – அபாயத்தில் உள்ள மாநிலங்கள்!

வியாழன், 28 மே 2020 (09:00 IST)
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைந்து நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 4,531 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 67,692 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,948 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,897 பேர் பலியான நிலையில் 17,918 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் 18,545 பாதிப்புகளுடன் இரண்டாம் இடத்தை அடைந்துள்ளது. குஜராத்தில் 15,195 பேரும், டெல்லியில் 15,257 பேரும், ராஜஸ்தானில் 7,703 பேரும், மத்திய பிரதேசத்தில் 7,261 பேரும், உத்தர பிரதேசத்தில் 6,991 பேரும் அதிகபட்சமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்