இந்தியாவா? அமெரிக்காவா? சீனாவின் போர் டார்கெட் யார்?

வியாழன், 28 மே 2020 (10:38 IST)
சீன அதிபர், தங்களது ராணுவத்தை போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
 
இந்தியா – சீனா எல்லைப்பகுதிகளான அருணாச்சல பிரதேசம் மற்றும் லடாக் மீது அடிக்கடி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது சீனா. கடந்த ஆண்டு லடாக் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டபோது சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 
 
இதனிடையே, இந்திய - சீன எல்லைப்பகுதியான லடாக் அருகே இருநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதையடுத்து இருநாடுகளும் லடாக் எல்லைப்பகுதிளில் படைகளை குவித்து வருகின்றன.
 
கொரோனா விவகாரத்தில் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில்,  சர்ச்சைக்குரிய தென்சீன கடல்பகுதியிலும், தைவான் நீரிணை பகுதியிலும் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் சீன அதிபர் ஷி ஜின் பிங், சீன படைகளுக்கான பயிற்சிகளை அதிகரிக்க வேண்டும் என்றும், போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இந்தியா மாற்றும் அமெரிக்காவுடன் சீனாவுக்கு மோதல் போக்கு இருப்பதால் இந்த போருக்கு தயாராகும் சூழல் யாருக்கானது என சந்தேகம் எழுந்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்