புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது?

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:17 IST)
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை நெருங்குவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
 
வங்கக் கடலில் அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி வரும் 18ஆம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு ஆந்திர கடற்கரை பகுதியை நெருங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
 
வங்க கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு வரும் 18ம் தேதி வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நெருங்கும் என்றும் அந்த சமயத்தில் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவில் கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்