5 மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!

ஞாயிறு, 14 நவம்பர் 2021 (14:14 IST)
அந்தமான் அருகே வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக ஐந்து மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகியது என்பது இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் கூறப்பட்டு வந்தது
 
இந்த காரணமாக குமரி உள்பட தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 5 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டது 
 
கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், திருப்பூர் , தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்