டெல்டா + ஆக உருவெடுத்த டெல்டா வைரஸ்...

செவ்வாய், 15 ஜூன் 2021 (08:25 IST)
இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாக உருமாற்றம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 
 
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்டு வேகமாக பரவி வந்த டெல்டா வகை வைரஸ் தற்போது டெல்டா + வகை வைரஸாக உருமாறியுள்ளது. இந்த வைரஸ் இன்னும் அதிகம் பரவவில்லை எனவும் ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா பகுதிகளில் இந்த வைரஸ் வகை காணப்படுவதாகவும் இந்தியாவில் இப்போது தான் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்