சுப்ரீம் கோர்டின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்கிறார்...

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:38 IST)
கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து பெண்களும் சபரிமலை கோவிலுக்குள் செல்லலாம், ஆதார் அட்டை செல்லும், ஓரின சேர்க்கை தவறில்லை, கணவன் அல்லது மனைவி பிறருடன் தவறான உறவு  குற்றமல்ல போன்ற அதிரடி தீர்ப்புகளின் மூலம் பாரத இந்தியாவின் வரலாற்றில்  என்றும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு நீதிபதியாக தற்போதைய சுப்ரீம் கோர்டின் தலைமை நீதியாக இருக்கும்  தீபக் மிஸ்ரா இருப்பார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மதம் 28 ஆம் தேதி சுரீம் கோர்ட்டின் நீதிபதியாக பொறுப்பேற்ற அவரது பதவிக் காலம் இன்றுடன் முடிவடைவதால் நேற்று அவருக்கு பிரிவு உபச்சார விழா நடைபெற்றது.
 
இந்நிலையில் நாளை புதன் கிழமை புதிய நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவி ஏற்கவுள்ளார். பல முக்கியமான  வழக்களுக்கு  இன்னும் தீர்வு காணப்பட வேண்டிய பொறுப்பு உள்ளதால் ரஞ்சன் கோகாய் மீது அதிகமான எதிர்பார்ப்பு  ஏற்ப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்