காதல் விவகாரம் - டியூஷன் மாஸ்டர் சுட்டுப் படுகொலை

Webdunia
செவ்வாய், 2 அக்டோபர் 2018 (12:36 IST)
டெல்லியில் டியூஷன் சென்டர் ஆசிரியர் ஒருவர் காதல் விவகாரத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துடுள்ளது.
டெல்லி ஜகான்ஜிபுரியை சேர்ந்தவர் அங்கித் மாத்தூர்(31). பட்டதாரியான இவர் அதே பகுதியில் டியூஷன் சென்டர் நடத்தி வந்தார். மாணவர்களுக்கு அவர் பாடம் எடுத்தும் வந்தார்.
 
இந்நிலையில் நேற்று டியூஷனுக்கு வெளியே நின்று கொண்டிருந்த அங்கித், மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அங்கித்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த அங்கித் சம்பவ இடத்திலே பலியானார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், அங்கித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதனிடையே மரணமடைந்த அங்கித்தின் சகோதரி கூறுகையில், அங்கித் கடந்த சில வருடங்களாக வேறு மதத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இது அந்த பெண்ணின் பெற்றோருக்கும், அவரது சகோதரருக்கும் பிடிக்க வில்லை.
 
எனவே அவர்கள் தான் என் தம்பியை கொன்றுவிட்டார்கள் என கண்ணீர் மல்க கூறினார். அங்கித்தின் சகோதரி அளித்த புகாரின் பேரில் போலீஸார் அங்கித் காதலியின் குடும்பத்தை சார்ந்த 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்