நெட் தேர்வு முடிவுகள் எப்போது? யுஜிசி அறிக்கை

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (15:29 IST)
நெட் தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என யுஜிசி அறிக்கை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
பல்கலைக்கழக மானியக் குழு நடத்திய நெட் தேர்வு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரிலும், 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலும் நடைபெற்றது
 
இந்த இரண்டு தேர்வுகளுக்கான முடிவுகள் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்னும் ஓரிரு நாளில் நெட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என யுஜிசி அறிவித்துள்ளது 
 
மேலும் இந்த தேர்வு முடிவுகளை யுஜிசி அதிகாரப்பூர்வமான இணைய தளமான ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது பெயர் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்