நீட் முடிவுகள் இணையத்தில் இருந்து நீக்கம்!!

Webdunia
சனி, 17 அக்டோபர் 2020 (10:56 IST)
நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு இணையத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 
 
மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மாதம் 13ம் தேதி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பிலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தபோதிலும், மத்திய அரசு இந்த தேர்வை விடாப்பிடியாக நடத்தியது.
 
3,862 மையங்களில் நடந்த இந்த தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 15 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில், சுமார் 13 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர் என்பதும், தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரம் பேர் நீட் தேர்வை எழுதியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இந்த தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியானது. நீட் தேர்வு முடிவுகள் அறிவிப்பில் குளறுபடி இருந்தது சர்ச்சையானது. இதனால் இணையதளத்தில் இருந்து நீட் மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவு நீக்கம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்