பல பயிற்சி வகுப்புகளில் அதிகப்படியான கட்டணம் காரணமாக, திறமையான மாணவர்களுக்கு சரியான பயிற்சி என்பது எட்டாக் கனியாக உள்ளது. ஆனால், நம் அகிலன் இன்ஸ்டிட்யூட், திறமையான ஏழை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நற்செயலையும் செய்து வருகிறது. இதன்முலம், 1500 க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படித்து பயன் பெற்று இருக்கிறார்கள். இந்நிலையில், மருத்துவம் பயிலும் கனவுக்கு பெரும் அச்சுறுத்தலாக நீட் தேர்வு உருவெடுத்துள்ளது. அந்த அச்ச உணர்வில் இருந்து மாணவர்களை வெளிக் கொண்டு வந்து, அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் நோக்கில் நம் அகிலன் இன்ஸ்டிட்யூட் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு Marvel Educare என்னும் பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்து இருக்கிறது. இங்கு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சி சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. முதலாமாண்டு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும், நீட் தேர்வில் வெற்றி பெற்று ஸ்டான்லி உள்ளிட்ட தரமான மருத்துவமனையில் மருத்துவ படிப்பை தொடங்கியுள்ளனர்” எனவும் அகிலன் கூறினார்.