நீட் தேர்வு முறைகேடு.! மாணவர்களின் பட்டியலை வெளியிடுக..! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Senthil Velan
வியாழன், 20 ஜூன் 2024 (14:34 IST)
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை  ஜூலை 8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
நடந்து முடிந்த மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு புகார் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1,563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்ததோடு அவர்களுக்கு ஜூன் 23ம் தேதி மறு தேர்வு நடத்த  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை  நீதிபதி விக்ரம்நாத் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. தற்போது மறுத்தேர்வு எழுத உள்ள 1563 மாணவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 
 
மேலும் நீட் தேர்வு மீதான நம்பகத் தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், தேசிய தேர்வு முகமை வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக தொடரப்பட்ட 4 மனுக்களுக்கு தேசிய தேர்வு முகமை ஜூலை  8-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தனர்.

ALSO READ: கள்ளச்சாராய உயிரிழப்புக்கு தமிழக அரசே காரணம்..! வானதி சீனிவாசன் கண்டனம்..!!

நீட் தேர்வு தொடர்பாக உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மீதான விசாரணைக்கும் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்