நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

Siva

ஞாயிறு, 16 ஜூன் 2024 (09:39 IST)
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது தகவல் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் வட இந்தியாவில் பல முறைகேடுகள் நடந்ததாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

நீட் தேர்வில் முறைகேடு செய்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டில் தேசிய தேர்வு முகமை உறுதி அளித்திருந்த நிலையில் தற்போது அதிரடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நீட் தேர்வில் முறைகேடு செய்த நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இந்த சம்மனுக்கு ஆஜராகும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி அதன் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மே ஐந்தாம் தேதி நடந்த நீட் தேர்வில் பிகாரில் வினாத்தாள் கசிந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்