மோசடி வழக்கு - நீரவ் மோடியின் காற்றாலை பண்ணை முடக்கம்

Webdunia
வியாழன், 31 மே 2018 (09:19 IST)
பண மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான காற்றாலை பண்ணையை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரியான நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் வாங்கிய ரூ.12,723 கோடி கடனை திரும்பச் செலுத்தவில்லை. பின் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.
 
மோசடி தொடர்பாக சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகின்றன. அதன்படி நீரவ் மோடியின் 691 கோடி  கோடி மதிப்புள்ள நகைகள் உள்பட சொத்துக்களை ஏற்கனவே சிபிஐ முடக்கியுள்ளது.
இந்நிலையில் நிரவ் மோடி குடும்பத்தினருக்கு சொந்தமான 52.80 கோடி ரூபாய் மதிப்புள்ள காற்றாலை பண்ணையை, அமலாக்கத் துறை தற்பொழுது முடக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்