நீரஜ் சோப்ரா உலகம் முழுவதும் இலவசமாக தங்கலாம் OYO சிஇஒ

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (23:11 IST)
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வரும் நிலையில் அவர்  உலகம் முழுவதும் இலவசமாகத் தங்கலாம் என ஒயோ (oyo) நிறுவன சி.இ.ஒ தெரிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் நீரஜ் சோப்ரா வெற்றி பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்தியாவிற்கு 7 வது பதக்கம் கிடைத்துள்ளது. இதுவரை டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இந்தியா மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
சரித்திரத்தில் முக்கிய நாள் என இந்தியா மக்கள் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு சாதனை நீரஜ் சோப்ராவால் இன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 120 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா  ஒலிம்பிக் அதெலெட்டிக்கில் முதல் தங்கம் வென்று சாதித்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் 65 ஆம் இடத்திலிருந்து 47 வது இடத்திற்கு முன்னேறியது.

இதுகுறித்து நீரஜ் சோப்ரா கூறியுள்ளதாவது: ஈட்டில் எறிதலில் 90.57 மீட்டர் தூரம் வீசி முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடிக்க நினைத்தேன். இருப்பினும் என்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன். ஆனால் இலக்கை அடையவில்லை. விரைவில் அந்த இலக்கை அடைவேன் எனத் தெரிவித்தர்.

இந்நிலையில், உலகளவில் புகழ்பெற்ற ஓயோ நிறுவன சி.இ.ஒ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உலகம் முழுவதிலும் உள்ள OYO அறைகளில்  இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஹரியானா மாநில அரசு அவருக்கு ரூ.  6கோடி பரிசு மற்றும் கிரேட்  1  அரசுப் பணி வழங்குவதாகவும்,  இண்டிகோ விமான நிறுவனம்  அவருக்கு ஓராண்டிற்கு இலவசமாகப் பயணம் செல்லலாம் எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்